தேசிய மட்டத்தில் நடைபெற்ற் டெனிஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன் போது சாதனை மாணவர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியங்களுடன் பாடசாலையின் முன்பக்கத்திலிருந்து வீதி வழியாக நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் தேவாரம் இசைக்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இப் பாடசாலையின் அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு வருகைதந்த விருந்தினர்களால் சாதனை மாணவர்களுக்கு மெடல் அணிவிக்கப்பட்டு சான்றிதல் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கிருபா சாரதி பயிற்சி பட்டறையின் பணிப்பாளர் அ.கிருபாகரன் மற்றும் எஸ்.வி.எம். பிரைவேட் லிமிட்டெட் நிறுவன உரிமையாளர் முருகேசு குணரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சாதனை படைத்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய பயிற்சியாளர்களும் மற்றும் நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தவர்களும் பாடசாலையின் அதிபரினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாடசாலையின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் இக் கௌரவிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment