யாழ் செம்மணியில் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டு நீராடிய இளைஞரை காணவில்லை..! நீரில் மூழ்கியிருக்கலாமென தேடுதல்! - Yarl Voice யாழ் செம்மணியில் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டு நீராடிய இளைஞரை காணவில்லை..! நீரில் மூழ்கியிருக்கலாமென தேடுதல்! - Yarl Voice

யாழ் செம்மணியில் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டு நீராடிய இளைஞரை காணவில்லை..! நீரில் மூழ்கியிருக்கலாமென தேடுதல்!




யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வருகின்ற 21 வயதுடைய குறித்த இளைஞர் இன்று மாலை தூண்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் குளத்தில் நீராடியும் இருக்கின்றார். இதன் போது நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து அப் பகுதி மக்கள் உட்பட பலரும் இணைந்து இரவிரவாக நீண்ட நேரம் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
 
எனினும் இதுவரையில் இளைஞரைக் காணவில்லை. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post