யாழ். செம்மணிக் குளத்தில் நேற்று காணாமல் போயிருந்த இளைஞர் இன்று சடலமாக மீட்பு..!!! - Yarl Voice யாழ். செம்மணிக் குளத்தில் நேற்று காணாமல் போயிருந்த இளைஞர் இன்று சடலமாக மீட்பு..!!! - Yarl Voice

யாழ். செம்மணிக் குளத்தில் நேற்று காணாமல் போயிருந்த இளைஞர் இன்று சடலமாக மீட்பு..!!!




யாழ்ப்பாணம் செம்மணி குளத்தில் நேற்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர் நீண்ட நேர தேடுதலின் பின்னர் இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் குளத்தில் நீராடியிருந்த நிலையில் நீரில்  மூழ்கி நேற்றையதினம் காணமல் போயிருந்தார்.

இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வருகின்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றையதினம் காணாமல் போயிருந்த நிலையில் அப் பகுதி மக்கள் உட்பட பலரும் இணைந்து இரவிரவாக நீண்ட நேரம் தேடுதல் நடத்தியிருந்னர்.
 
எனினும் நேற்றிரவு வரை காணாமல் போயிருந்தவர் மீட்கப்பட்டார் நிலையில் இன்றையதினமும் நீண்ட நேரமாக தொடர் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post