யாழ்.பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிா்காப்பு பணியாளா்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் பலா் காயமடைந்த தகவல் வழங்கப்பட்ட நிலையில் 1990 அவசர அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவா்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளது.
இதன்போது அம்புலன்ஸ் வண்டியை வழிமறித்த காடையா்கள் அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வண்டியிலிருந்த உயிா்காப்பு பணியாளா்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனா். எனினும் அம்புலன்ஸ் வண்டி அங்கிருந்து நோயாளா்களை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
Post a Comment