உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இலங்கை நேரப்படி சற்று முன்னர் 12 (AM) மணியளவில் Kyiv லிருந்து அமெரிக்கா ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவதற்காக சென்றுள்ளார். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து நாட்டிற்கு வெளியே அவரது முதல் பயணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு பயணித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி ஒரு அமெரிக்க இராணுவ விமானத்தில் அமெரிக்கா Washington ற்கு பயணம் செய்தார், மேலும் அவர் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி ஜோ பிடனுடன் இருதரப்பு கலந்துரையாடலுக்காக கார் மூலம் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.
அவரை ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் கைகுலுக்கி, வெள்ளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர்.
உக்ரேனிய ஜனாதிபதியின் பயணம், அமெரிக்காவிடமிருந்து மேலும் உதவிகளைப் பெறுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது மற்றும் அமெரிக்க மக்களின் ஆதரவையும் அவர் பெறுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment