யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
காணாமல் போன ஆட்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனொரு கட்டமாக யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதோடு ஒரு சிலர் அதிகாரிகளிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
Post a Comment