லண்டனைத் தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிட ஆலோசனை நிறுவனமான Henley & Partners வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, உலகில் மிகவும் சக்திவாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளில் இலங்கை 100வது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர், விசா இன்றி உலகின் 42 இடங்களுக்கு செல்ல முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த குறியீட்டின் படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த வெளிநாட்டு பாஸ்போர்ட் கொண்ட நாடாக #ஜப்பான் மாறியுள்ளது. ஜப்பானிய குடிமக்கள் உலகளவில் 193 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெறுகிறார்கள்.
#சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், தென் கொரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. உலகின் சக்தி வாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு சுட்டெண்ணில் முறையே ஆசியாவின் 03 நாடுகள் முன்னிலையில் இருப்பது சிறப்பு.
03 ஆசிய நாடுகளுக்குப் பிறகு, அதிக சக்தி வாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளில் முன்னுரிமைப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அதிகமான நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 190 இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லலாம், அதைத் தொடர்ந்து பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்குச் செல்லலாம்.
ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் 6வது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் செக் குடியரசு ஆகியவற்றுடன் நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா 7வது இடத்தில் உள்ளன.
ஆப்கானியர்கள் மீண்டும் குறியீட்டின் கீழே உள்ளனர், 27 நாடுகள் மட்டுமே அந்த வெளிநாட்டு பாஸ்போர்ட்டில் விசா இன்றி பயணிக்க முடியும் .
Post a Comment