யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற விசேட நிகழ்வில் பதில் மாவட்ட செயலாளர்
ம.பிரதீபனிடம் இருந்து கடமைகளை
புதிதாக நியமனம் பெற்ற மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வடமாகாண விவசாய அமைச்சு அலுவலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment