வேலன் சுவாமிகள் சற்று முன்னர் பொலிஸாரால் கைது..!!! - Yarl Voice வேலன் சுவாமிகள் சற்று முன்னர் பொலிஸாரால் கைது..!!! - Yarl Voice

வேலன் சுவாமிகள் சற்று முன்னர் பொலிஸாரால் கைது..!!!



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி விரைவிலான பேரியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான தவத்திரு வேலன் சுவாமிகள் இன்றைய தினம் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் கிரமசிங்கவிற்கு எதிராக யாழில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பொங்கல் தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் அதற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது தேசிய பொங்கல் தின நிகழ்வு நடைபெறும் இடத்தை அண்மித்த பகுதியில் வைத்து போலீசாரால் வீதி தடைகள் போடப்பட்டு மறிக்கப்பட்டிருந்தது.

இதன் போது போராட்டக்காரர்கள் தாம் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என கூறி இந்த வீதி தடையை அகற்றுமாறு போலீசாரிடம் கோரியிருந்தனர். ஆனாலும் வீதிக் தடைகளை அகற்றாது போலீசாரம் விசேட அதிரடிப்படையும் குவிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியைச் செல்ல விடாது தடுத்து நிறுத்தினார்.

இதனால் விதி தடைகளை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது போலீசார் இருக்கும் பொது மக்களுக்கு முறுகல் நிலை ஏற்பட்டு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இரகசியமாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இன்றையதினம் வேலன் சுவாமிகளின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் விசாணைகளுக்காக வருமாறு அழைப்பு விடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து விசாரணைக்குப் சென்ற வேலன் சுவாமிகளை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள வேல்சுவாமியை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலே வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மேலும் சிலரையும் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0/Post a Comment/Comments

Previous Post Next Post