மனைவியை பழிவாங்க ஆணுறுப்பை வெட்டி வீசிய கணவன் - பீகாரில் பெரும் அதிர்ச்சி !!! - Yarl Voice மனைவியை பழிவாங்க ஆணுறுப்பை வெட்டி வீசிய கணவன் - பீகாரில் பெரும் அதிர்ச்சி !!! - Yarl Voice

மனைவியை பழிவாங்க ஆணுறுப்பை வெட்டி வீசிய கணவன் - பீகாரில் பெரும் அதிர்ச்சி !!!



பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வரமறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மாதேபுரா அருகே உள்ள ரஜினிநாயநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 25). இவருக்கு அனிதா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணமான பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.

தற்போது கிருஷ்ணா - அனிதா தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் என 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் இவர், 2 மாதங்களுக்கு ஒருமுறைதான், தனது குடும்பத்தை சந்திக்க வருவார். இதனால் அனிதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் கிருஷ்ணா தனது குடும்பத்தை காண வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் வீட்டிற்கு சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. இதனால் அனிதாவை கணவர் கிருஷ்ணா அழைத்துள்ளார். ஆனால் என்ன பிரச்னை என்று தெரியவில்லை, திடீரென அனிதா வர மறுத்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து அவரை அழைத்த கிருஷ்ணாவை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் மனைவி அனிதா.

கிருஷ்ணாவை தொடர்ந்து அவரது குடும்பத்தாரும் அனிதாவை அழைத்துள்ளனர். இதற்கு அனிதா அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு மனது சரியில்லை என்றும், சிறிது காலம் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

எவ்வளவு கூறியும் வராத மனைவி மீது கிருஷ்ணா கோபம் கொண்டார். மேலும் அந்த கோபத்தை தன் மீதே காட்டிக்கொண்டார்.

ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தனது அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த கிருஷ்ணாவை கண்ட உறவினர்கள், இரத்த வெள்ளத்தில் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் அவர் இப்படி நடந்துகொண்டது குறித்து சரியான விளக்கம் தெரியவரவில்லை. பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வரமறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post