இந்தியாவை வென்று, T20 தொடரின் எதிர்பார்ப்பை வலுப்படுத்தியது இலங்கை
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் தசுன் ஷானக்க 56 ஓட்டங்களையும், குசல் மென்டீஸ் 52 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அக்ஸர் பட்டேல் 24 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு 207 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இந்திய அணி சார்பில் அக்ஸர் பட்டேல் 65 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி, மூன்று இருபதுக்கு இருபது தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளன.
Post a Comment