அபிவிருத்தி லொத்தர் சபை சீட்டெழுப்பின் வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு!! - Yarl Voice அபிவிருத்தி லொத்தர் சபை சீட்டெழுப்பின் வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு!! - Yarl Voice

அபிவிருத்தி லொத்தர் சபை சீட்டெழுப்பின் வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு!!



அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டெழுப்பில்  கடந்த இரண்டு மாதங்களில்  வடமாகாணத்தில் வெற்றிபெற்ற  வெற்றியாளர்களுக்கு இன்று (07)  ஆளுநர் அலுவலகத்தில் காசோலைகள் வழங்கப்பட்டன.

வடக்கு ஆளுநர்  ஜீவன் தியாகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி  தவகோகுலன், கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி பிரதீபன் ஆகியோர் பங்கு கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசில்களை வழங்கி வைத்தனர்.

சனிதா ரிக்கற்றில்  சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா வெற்றி பெற்ற மன்னாரைச் சோ்ந்தவருக்கும் வலம்புரி அதிஷ்ட  ரிக்கற் மூலம் 20 இலட்சம் வெற்றிபெற்ற வெற்றியாளரான பளையைச் சோ்ந்தவருக்கும்  காசோலை வழங்கப்பட்டன.

அத்துடன் சங்கானை, யாழ்பாணம், சாவகச்சேரி, வவுனியா மற்றும் மன்னார்  பிரதேசங்களில் சனிதா, அதகோடிபதி, கப்ருக்க, அதிஷ்ட ரிக்கற் ஊடாக  10 இலட்சம் வெற்றி பெற்றவர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post