யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறையினரால் 2023 பொங்கல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியர் க.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் அமைந்துள்ள பைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வரலாற்றுத்துறையின் நான்கு வருட மாணவர்களுக்கிடையிலும் கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்று இறுதியாக துறைபேராசிரியர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வு நிலை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் க.அருந்தவராஜா, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், வரலாற்று துறையின் கலாசார சுற்றுலா, தொல்லியல்,வரலாற்று பிரிவு மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment