மகா சிவராத்திரியை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடா வருடம் அனுஷ்டிக்கபடும் சிவவாரம் இவ்வருடமும் மாசி மாதம் 13ஆம் திகதி முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இக்காலப்பகுதியில் சிரமதான பணிகள் இரத்ததானம் உட்பட்ட பல சமூக சேவைகளை நாடாளாவியரீதியில் அகில இலங்கை சைவ மகா சபை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் இரத்ததான முகாமொன்று கீரிமலை குழந்தை வேல் சுவாமிகள் அறப்பணி மைய அரங்கில் காலை 8 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சிவதொண்டர்கள்,சி வமங்கையர்கள்,தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் உத்தியோகத்தர்கள்உட்பட பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment