தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி சர்வமத தேவர்களை சந்தித்து ஆசி பெற்ற கூட்டணி! - Yarl Voice தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி சர்வமத தேவர்களை சந்தித்து ஆசி பெற்ற கூட்டணி! - Yarl Voice

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி சர்வமத தேவர்களை சந்தித்து ஆசி பெற்ற கூட்டணி!



தமிழ் மக்கள் கூட்டணியினர் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி சர்வ மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசிகளை பெற்றுள்ளனர்.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணி மணிவண்ணன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டு மதத் தலைவர்களிடம் ஆசிகளை பெற்றனர்.

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை ஆதீன குறும் முதல்வர் மற்றும் சிவகுரு முதல்வர் உட்பட யாழ் ஆயர் மற்றும் முஸ்லீம் மௌளபி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினர்.










0/Post a Comment/Comments

Previous Post Next Post