சந்நிதியான் ஆச்சிரமத்தால் வட்டுக்கோட்டை - பிரதேச வைத்தியசாலைக்கு 770540.00 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் கடந்த சில தினங்களிற்கு முன்னர் வழங்கி வைக்கப்பட்டது.
அன்மைக்காலமாக குறித்த வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் வைத்திய சாலையினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கைக்கு அமைவாக 770540.00 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் வைத்திய சாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ரதினி காந்தநேசன் அவர்களிடம் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இவ் உதவித் திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
அன்மைக்காலமாக மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு அமைவாக மல்லாவி ஆதார வைத்தியசாலை, தருமபுரம் பிரதேச வைத்தியசாலை, மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை, முழங்காவில் ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை என்பனவற்றிற்கு ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment