பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்!! பழநெடுமாறன் அறிவிப்பு - Yarl Voice பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்!! பழநெடுமாறன் அறிவிப்பு - Yarl Voice

பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்!! பழநெடுமாறன் அறிவிப்பு



தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார்  என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.

தஞ்சையை அடுத்த விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் நம்முடைய தமிழக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்த சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

 இந்த சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுதும் தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும் - ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.

தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் கால் ஊன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. 

இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்.

இப்போது இலங்கையில் ஆழமாக கால் ஊன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. 

இந்து மகாகடலின் சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இந்திய அரசு.

 இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்று பட்டு நின்று தமிழின தேசிய தலைவர் பிரபாகரனை துணை நிற்குமாறு வேண்டி கேட்கிறோம்.

பிரபாகரன் அவர்களின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன்.

எங்கே இருக்கிறார் - எப்போது வருவார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உலகம் முழுவதும் உள்ள நம்முடைய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார் அதை உலகம் அறிந்து கொள்ளும் என்று தெரிவித்தார் இந்த பேட்டியின் போது கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post