தேசிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை(25) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
மின்சாரம், நீர், சமையல் எரிவாயு, உணவுகளின் விலைகளை அதிகரித்து மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிக்கவும், தேர்தலை வென்றெடுக்கவுமே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment