ஜ ஓ எம் Iom தூதுக்குழுவினர் இன்றையதினம் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டு யாழ்மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.
Iom இனுடைய இலங்கை உதவி வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர் இன்று காலை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பிலும், மேலும் யாழ்மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
Post a Comment