யாழில் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி பேரணி முதல் நாளில் கிளிநொச்சியில் நிறைவு..!! - Yarl Voice யாழில் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி பேரணி முதல் நாளில் கிளிநொச்சியில் நிறைவு..!! - Yarl Voice

யாழில் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி பேரணி முதல் நாளில் கிளிநொச்சியில் நிறைவு..!!



சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி பேரணியானது கிளிநொச்சி சென்று நிறைவடைந்தது. 

யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது இன்று மாலை கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் நிறைவடைந்தது. 

இப் பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள் மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்கள்,  பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேரணிக்கு பல்வேறு தரப்பினர்களும் ஆதரவை வழங்கி கலந்து கொண்டு வருகின்ற நிலையில் பொலிஸாராலும் புலனாய்வாளர்களாலும் பல்வேறு தடைகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதையும் தாண்டி திட்டமிட்டபடி பேரணி பயணிக்கும் என மதத் தலைவர்களும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய நாளையதினம் முல்லைத்தீவை நோக்கி பயணிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post