தமிழரின் இதய பூமி தராசு சின்னத்திற்கு தாரைவார்க்க தமிழரசுக் கட்சி முயற்சி என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழரின் இதய பூமியான முல்லைத்தீவு மாவட்டம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விலை மதிப்பிட முடியாத தியாகத்தை கொடுத்த வரலாற்றுத் தியாக பூமி. தற்போது பதவி வெறி பிடித்த சுயலாபக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியினால் முஸ்லீம் காங்கிரசின் தராசுச் சின்னத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சு பதவி எப்படி சரியான பேரப்பலம் இல்லாமல் சம்பந்தனால் கொடுக்கப்பட்டதோ அதை விட மேலாக எந்தவித உரித்தும் இல்லாத தராசு சின்னத்தில் 21 அடிமைகளை போட்டியிட வைப்பதற்கு கிழக்கு மாகாணத்தின் பல அதிகார உரிமைகளை தாரை வார்த்துள்ளது தமிழ் அரச்க் கட்சி .
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறையில் தமிழர் பிரதிநிதி இல்லாமல் போவதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு அரச பிரதிநிதிகளும் வெல்வதற்கும் காரணம் கடந்த கிழக்கு மாகாணசபையில் தமிழ் அரசுக் கட்சி ஆட்சிக்காலம் முழுவதும் முஸ்லிம் ஒரு வரை முதலமைச்சராக நியமித்தமையும் அதனால் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுமே காரணமாகும்.
கடந்த காலத்தில் கிழக்கில் ஏற்பட்ட நிலை போன்று எதிர்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டமும் அரச சக்திகளுக்கு இரையாகும் அவலநிலை உருவாக உள்ளது இதனால் தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து தமிழ்த் தேசிய நீக்கத்தை முன்னேடுக்கும் தரப்புக்களையும் முகவர்களையும் விரட்ட தயாராக வேண்டும்.
Post a Comment