யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெறும் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் கவணயீர்புப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான இப்பேரணி இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியைச் சென்றடைந்து பின் கெட்டபுள் சந்தியில் நிறைவுற்றது.
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே இவ் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன்சுவாமிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேலும் பல போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment