யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு! - Yarl Voice யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு! - Yarl Voice

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!




பதில் பொலிஸ் மா  அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய  வேலை திட்டம் பொலிசாரால் நாடுபூராகவும்  முன்னெடுக்கப்பட்டுவருவதோடு  போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என பலரும் பொலிசாரால்  கைது செய்யப்பட்டு வரும் நிலையில இன்றைய தினம் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிசாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது 

குறித்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ்ப்பாணம மாவட்ட பிரதி போலீஸ்மா அதிபர் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் குறித்த பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post