சட்டத்திலே இருக்கிற 13 ஜ அமுல்ப்படுத்த ஏன் போர்க்கொடி? சஜித் கேள்வி - Yarl Voice சட்டத்திலே இருக்கிற 13 ஜ அமுல்ப்படுத்த ஏன் போர்க்கொடி? சஜித் கேள்வி - Yarl Voice

சட்டத்திலே இருக்கிற 13 ஜ அமுல்ப்படுத்த ஏன் போர்க்கொடி? சஜித் கேள்வி




எமது சட்டப் புத்தகத்திலே இருக்கின்ற 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துகிற போது ஏன் பிரச்சனைகள் வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசா கேள்வியெழுப்பியுள்ளார்.

எனவே ஒரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர் கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போமு 13 ஆவது திரெத்தம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது எமது சட்டப் புத்தகத்தில் இன்று அல்லது நேற்று வந்த ஒன்றல்ல. இந்த 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற போது ஏன் பிரச்சனைகள் வருகின்றது. 

நாட்டிலுள்ள ஏனைய இனங்களும் மதங்களும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிப்பதில்லை. அதுவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது. 

ஆகவே சற்று சிந்தித்து பாருங்கள். சிங்கள மொழி பேசும் எமது சிங்கள மக்கள் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர். 

அதே போன்றே தமிழ் மக்களை பொறுத்தவரையில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர். 

அவ்வாறே முஸ்லீம் மக்களும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர். 

இவ்வாறு ஒவ்வொருவரும் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். அதுவே இங்குள்ள பாரிய பிரச்சனையாகும்.

எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனூடாகவே நம்பிக்கையை கட்டமைக்க முடியும். அதுவே மிக முக்கியமான விடயமாக உள்ளது.

மேலும் கமராக்களுக்காக அதனை ஏற்படுத்தாமல் மனதளவில் அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post