ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் வேறு கட்சிகளுக்கு சென்றாலும் அங்கிருந்து பலர் எம்முடன் வந்து இணைய இருக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்த தொடர்பிலான கேள்விக்குப் பதிலளிக்கும் போது சஜித் பிரேமதாசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ணலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா யாழ் ஊடாக அமையத்தில் நேற்று ஊடக சந்திப் போன்ற நடாத்தியிருந்தார்.
இதன் போது உங்களுடன் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தன வேறு கட்சியுடன் இணைந்து விட்டாரா என சஜித் பிரேமதாசாவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்த்து
இமற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாசா அப்படி எதுவம் எனக்குத் தெரியாது. என்னை விடவும் உங்களிற்கு சிறந்த புலனாய்வாளர்கள் இருக்கின்றனரல்லவா. அவர்களிடம் இது தொடர்பில் வினவுங்கள்.
ஆனாலும் இங்கு நான் ஒரு விடயத்தை கூறி வைக்க விரும்புகிறேன். அதாவது எம்முடன் இருந்து செல்பவர்களுக்கு அப்பால் பலர் எம்முடன் இணைய இருக்கின்றனர்.
அங்கு யார் நீர் இணைந்தார்கள் என்பதை பார்த்தீர்கள் அல்லவா. எனவே தெரியாத விடயங்கள் டொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறி பலனில்லை.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான கேள்வி ஓன்றிற்கு பதிலளிக்கும் போது எமது அரசியல் மிகவும் கீழ் மட்டத்திலேயே உள்ளது. அது தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன்.
நான் நகைச்சுவையாக கூறவில்லை. தனிப்பட்ட ரீதியில் ரணீல் விக்கரமசிங்கவுடன் எனக்கு எந்தவித முரண்பாடும் இல்லை என்றார்.
Post a Comment