தந்தை செல்வா காலம் முதல் சம்பந்தர் காலம் வரை தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டேவந்திருக்கின்றனர் . இனியும் இந்த நிலைமை தொடராமல் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியினருக்கும் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினருக்கும் இடையில் யாழில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் எங்களை வந்து சந்தித்திருந்தனர். இதன் போது தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் நாங்கள் பேசியிருந்தோம்.
அதாவது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தரப்பினர்களால் தந்தை செல்வா காலம் முதல் சம்பந்தர் ஐயா காலம் வரை தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டியதுடன் இனியும் நாங்கள் ஏமாற்றப்படக் கூடாதென்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
மேலும் ஐனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கூறியிருந்தோம்.
அவ்வாறு 13 ஆவது திருத்தத்தை இப்போது நடைமுறை படுத்துவதற்கு மக்கள் முன்னணி முதலில் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டுமெனவும் சொல்லியிருந்தோம்.
மேலும் 13 இல் இப்போது உள்ளவற்றை நடைமுறைப்படுத்த தென்னிலங்கையில் தடையை ஏற்படுத்துகின்றனர் என்பதையும் அதில் இருக்கிற அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி அதனை முதலில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கோரினோம்.
இதற்கு நீங்கள் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். ஏனெனில் இந்த 13 ஆவது திருத்தம் வடகிக்கிற்கு மாத்திரமல்லாமல் நாடு முழுவதிற்குமே உரியமு. அதனால் அனைவருமே நன்மையடைய முடியும்.
ஆகையினால் இதனை நடைமுறைப்படுத்த நீங்கள் குரல் கொடுங்கள் அழுத்தத்தைக் கொடுங்கள் எனவும் இதனூடாக மக்களிடத்தே நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் என நாங்கள் கோரியிருந்தோம்.
இவ்வாறு நாங்கள் கேட்ட போது தங்கள் கட்சித் தலைவருடன் இதைப் பற்றி பேசுவதாகவும் இதனை முன்னெடுக்க தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் தங்களாலான முயற்சியை தாங்கள் எடுப்பதாவும் பதிலளித்திருந்தனர்.
அது மட்டுமல்லாமல் தாங்கள் முயற்சியை மட்டுமே இப்போது எடுக்க முடியுமென்றும் கூறினர். ஏனெனில் தற்போது தாங்கள் ஆட்சியில் இல்லை என்றும் அவ்வாறு இந்த 13 ஆவது தீருத்தத்தை அமுல்ப்படுத்துவது தற்போதைய ஆட்சியாளர்களின் கைகளிலேயே இருப்பதாகவும் தங்களது ஆட்சி அமைகிற போது இதனை தங்களால் செய்ய முடியுபென்றும் கூறியிக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment