கறுப்புஜீலை தினத்தில் யாழில் கதறிய உறவுகள்! அரசாங்கமே நிதி வேண்டாம் நீதியை வழங்கு என கோரிக்கை - Yarl Voice கறுப்புஜீலை தினத்தில் யாழில் கதறிய உறவுகள்! அரசாங்கமே நிதி வேண்டாம் நீதியை வழங்கு என கோரிக்கை - Yarl Voice

கறுப்புஜீலை தினத்தில் யாழில் கதறிய உறவுகள்! அரசாங்கமே நிதி வேண்டாம் நீதியை வழங்கு என கோரிக்கை



காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புஜீலை தினத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழில் முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமராக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள கலைத்தூது மண்டபத்திற்கு முன்பாக இன்று மதியம் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டு தரக் கோரி வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் மேற்படி சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது உறவுகள் எங்கே, நீதி வேண்டும், சர்வதேசமே கண்ணை திறந்து பார், உறவுகள் நீதி கோருகிற போது அரசாங்கமே நிதியை வழங்கி ஏமாற்றாதே, எங்கள் உறவுகளுக்கு பதில் கூறு உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை ஏழுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கறுப்பு ஜீலை தினமான இன்று கறுப்புஜீலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் நீதி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் யாழ் மாவட்ட சங்கத்திற்கான புதிய நிர்வாக தெரிவும் இன்றையதினம் இடம்பெற்றிருந்த்து. இதற்கமைய முன்னர் இருந்த சங்க தலைவி பூங்கோதை தலைமையிலான நிர்வாகமே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post