நான் மூளையை உபயோகித்து செயற்படுகிறேன் என்று விக்கினேஸ்வரன் கூறியதற்கு முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவர் என்னத்தை பாவித்து சிந்திக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
என்னுடைய அற்புதமான மாணவனுக்கு பல்வேறு தகைமைகள் இருந்தாலும் இவருக்கு தமிழ்த் தேசிய உணர்வு இல்லை என்றும் அவர் மூளையை பாவித்து செயற்படுவதாகவும் விக்குனேஸ்வரன் எம்பி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சுமந்திரன் எம்.பியிடம் விக்கினேஸ்வரனின் கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு பதிலளுத்திருந்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
விக்கினேஸ்வரன் சொல்லுகிற விடயங்களுக்கு நான் பதில் சொல்லப் போறதில்லை. ஆனால் என்னுடைய மூளையை உபயோகித்து நான் சிந்திக்கிறேன் என்று அவர் சொன்னதற்கு என்னுடைய நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஒரு ஆசிரியனாக தன்னுடைய மாணாக்கள் மூளையைத்தான் பாவித்து சிந்திக்கூறும் என்று அவர் கண்டு பிடித்திருக்கிற கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமான ஒரு கண்டுபிடுப்பாகும்.
ஆனால் அவர் என்னத்தைப் பாவித்து சிந்திக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment