யாழ் மாவட்ட உணவுத் திருவிழாவும் விற்பனைக் கண்காட்சியும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5,6,7ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதிபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
யாழ் மாவட்ட உணவுத் திருவிழாவும் விற்பனைக் கண்காட்சியும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள்ளது . இது தொடர்பான முதல் கட்ட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை துறை சார்ந்த அதிகாரிகளுடன் இடம்பெற்றது
இந்த கண்காட்சியில் 85 மேற்பட்ட முயற்சியாளர்கள் பங்கு பற்றவுள்ளார்கள். இந்த உணவுதிருவிழாவும் ,விற்பனைக் கண்காட்சியிலும் யாழ் மாவட்ட மக்கள் பங்குபற்றி முயற்சியாளர்களை ஊக்குவிற்பதுடன் தரமான உள்ளூர் உற்பத்திகளை பெற்ருக்கொள்ள வேண்டும் .
மேலும் 5 ஆம் திகதி மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரையும் மறுநாள் காலை 9.30 மணிதொடக்கம் இரவு 10 மணிவரை மறுதினமும் காலை 9.30 மணி தொடக்கம் 10 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த உணவு விழா மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ள இளம் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தரமான உள்ளுர் உற்பத்திகளை காட்சிபடுத்தி விற்பனையை அதிகரித்து சிறந்தபலனை பெற்ருக்கொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment