மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். மாபியாக்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் உன்னை விரட்டுகீன்றனர். ஆனால் இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணிலிரூந்து விடைபெறுகிறேன் என கவலையுடன் தெரிவித்த வைத்தியர் அர்ச்சுனா நாளையதினம் கொழும்பு சென்று புதிய நியமனத்தை பெற்று கொண்டு தான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைம்தியசாலைக்கு கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக கூறியுள.ளார்.
எனது குரல்வளையை நசுக்கி எவரும் அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. மக்களுக்காண எனது பணி ஏப்போதும் தொடரும்.
சுகாதார அமைச்சர் தலைமையிலான குழுவின் யாழ் விஐயம் என்பது ஒரு நிகழ்ச்சி நிரலுடன் கூடிய கண்துடைப்பு என்பதுமட்டுமல்லாமல் ஏமாற்று வித்தையாகும்.
சாவகச்சேரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்
யாழில் பழிவாங்கப்பட்ட அர்ச்சுனா மீண்டும் சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்ககு நியமிக்கப்படவுள்ளார். இதனையடுத்து இங்கிருந்து இன்றுடன் செல்கின்றேன். எல்லாம் முடிய மீண்டும் இங்கே வருவேன். மக்களுக்கு நன்றி என்றார்.
Post a Comment