தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து தமிழரசுகட்சி இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை - Yarl Voice தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து தமிழரசுகட்சி இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை - Yarl Voice

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து தமிழரசுகட்சி இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை




  எஸ்.நிதர்ஷன் 

தமிழர் தர்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை.

இவ்வாறு தமிழரசுக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

பொது வேட்பாளர் என்ற வியத்தில் தமிழரசுக் கட்சி இது சம்பந்தமாக இரண்டு மத்திய செயற்குழுக் கூட்டங்களிலே எடுத்த முடிவானது தமிழ பொது வேட்பாளர் என்ற விடயத்தைக் குறித்து நாங்கள் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்பதாகும்.

ஆனால் நாங்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால் ஜனாதிபதி தேர்தலிலே நிற்கின்ற பிரதான வேட்பாளர்களோடு நாங்கள் பேரம் பேசி அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே அவர்கள் சொல்லுகிற விடயங்களை  அவதானித்து யாருக்கு எங்கள் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்ற செய்தியை அதற்குப் பின்னர் நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறோம் என்றார்.

அதன்படி பிரதான வேட்பாளர்களில் தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியிருக்கிற சஜித் பிரேமதாசாவோடும் மற்றது அனுர குமார திஸாநாயக்க வோடும் எங்கள் கட்சி அலுவலகத்திலே உத்தியோக பூர்வமாக நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறோம்.

அத்தோடு எங்களுடைய எதிர்பார்ப்புக்களை அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவர்களுடைய தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு என்ன என்ன விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன எவற்றையெல்லாம் பகிரங்க படுத்தி சொல்லுகிறார்கள் என்பதை அவதானிப்போம். 

ஆனால்  வேறு எவரும் இன்னமும் தாங்களை வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கிற பட்சத்தில் அவர்களோடும் இதேமாதிரியான பேச்சு வார்த்தையை நாங்கள் நடாத்துவம் என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post