இவ் வருடம் 2024 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலகத்துக்கு ஆயிரத்து 233 .94 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபம் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் வரவேற்பு உரையை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வருடம் யாழ் மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள 15 பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக ஆயிரத்து 233.94 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்து 467 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட செயலகத்துக்கு 322 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 826 வேலைகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் 734 வேலைத் திட்டங்கள் முடிவுறு த்தப்பட்டுள்ளது.
ஆகவே குறுகிய கால பகுதியில் கிடைக்கப்பெற்ற நிதிகளில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்த உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment