ரயிலில் டீசல் திருடிய கும்பல்! யாழில் அம்பலம் - Yarl Voice ரயிலில் டீசல் திருடிய கும்பல்! யாழில் அம்பலம் - Yarl Voice

ரயிலில் டீசல் திருடிய கும்பல்! யாழில் அம்பலம்



யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இரவு வேளையில் புகையிரதம் தரித்து நின்றபோது 
கடந்த 9ம் திகதி இனந்தெரியாத குழுவொன்று திருட்டில் ஈடுபட்ட சமயம், புகையிரத நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் 
அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்ற நிலையில் நான்கு 20 லீற்றர் கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
புகையிரத எரிபொருள் தாங்கியின் திறப்புக்கள் அனுராதபுரத்திலேயே இருப்பதாக கூறப்படும் நிலையில் குறித்த திருட்டுக்கு புகையிரத நிலைய ஊழியர்களும் உடந்தையாக செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ச்சியாக எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருள் திருடப்பட்டு வந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார், புகையிரத திணைக்களத்தினர் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post