எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) கையொப்பமிட்டார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Post a Comment