யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது.
சேந்தாங்குளம் கடற்கரையில்
நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது சில வாடிகளும் எரிந்து நாசமானது. இதனையறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்பட்டாத நிலையில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment