நெடுந்தாரகைப் படகின் திருத்த வேலைகள் முடிவுற்ற நிலையில் விரைவில் பரிசாத்த நடவடிக்கைகள் இடம்பெறும் என வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நெடுந்தாரகைப் படகின் திருத்த வேலைக்காக சுமார் 59 மில்லியன் ரூபாக்கள் செல விடப்பட்ட நிலையில் தற்போது திருவோணமலை துறைமுகத்தில் திருத்த வேலைகள் முடிவுற்றது.
விரைவில் குறித்த படகினை குறிக் காட்டுவான் இறங்கு துறைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் மாதம் அளவில் பரிச்சாத்த நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment