சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைக்காமல் ஓய மாட்டீர்களா என்று ஜோ ரூட்டிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சாதனையில் கவனம் செலுத்தாமல் இங்கிலாந்து அணியின் வெற்றியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக ஜோ ரூட் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எத்தனை போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உங்களுடைய அணியில் பங்காற்றுகிறீர்கள் என்பதை வைத்தே உங்களை நீங்கள் மதிப்பிட முடியும்”
“எனவே அது தான் முன்னோக்கி அழைத்துச் செல்லும் விஷயம் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை இங்கிலாந்து அணிக்காக எவ்வளவு வெற்றிகளில் பங்காற்ற முடியும் என்பதே முக்கியமாகும். எனக்கு முன்னே இருக்குன் சூழ்நிலைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மனநிலையாகும். அந்த வகையில் தற்போது நான் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்”
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடுவதை எனக்கு நானே பார்க்க விரும்புகிறேன். அதற்கு பதிலாக ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதனையை துரத்தி விட்டு அத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்ற வகையில் நான் இல்லை. தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் விளையாடவே விரும்புகிறேன். நான் விளையாடுவதற்கு சிறந்த அணியில் இருக்கிறேன். நாங்கள் களத்திலும் களத்திற்கு வெளியேயும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்”
அந்த உணர்வு எனக்குள் இருக்கும் வரை டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறினார். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்று ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.
Post a Comment