யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஆறு ஆசனத்திற்காக 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சை குழுக்க ளும் போட்டியினுகின்றன.
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது என யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தார்கள் இந்த சந்திப்பில் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் உதவி தேர்தல் ஆணைநாளர் அமல்றாச் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதிபன் கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் முரளிதரன் ஆகியோர்கலந்து கொண்டார்கள் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககயில்
வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு வெள்ளிக்கிழமை நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளன.
இதில் 23 அரசியல் கட்சிகளின் விபரம்
ஐன சத போரமுன,ஈழமக்கள் ஐனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ்காங்கிரஸ், ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சோசலிச சமத்துவ கட்சி,தேசிய மக்கள் கட்சி, சிறிலங்கா பொதுஐன பொரமுன,எங்கள் மக்கள் சக்தி ,புதிய சுதந்திர முன்னணி, அலுணலு மக்கள் முன்னணி, சர்வஜன அதிகாரம், ஐக்கிய மக்கள்சக்தி ,ஐனநாயக தேசிய கூட்டணி ,தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணி, ஐனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ,ஐக்கிய தேசிய கட்சி ,அகில இலங்கை தமிழர் மகா சபை ,ஈரோஸ் ஜனநாயக முன்னணி ,ஜனநாயக இடது சாரணி ஆகிந கட்சிகளும் 21 சுயோட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன
மேலும் சுயேட்சைக் குழுக்கழுக்கான சின்னங்களும் இலங்கங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.
Post a Comment