நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் வேட்புமனுவை கையளித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராக க.இளங்குமரன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment