சிறிதரன் தலைமையில் தமிழரசு கட்சி யாழில் வேட்புமனுத் தாக்கல் - Yarl Voice சிறிதரன் தலைமையில் தமிழரசு கட்சி யாழில் வேட்புமனுத் தாக்கல் - Yarl Voice

சிறிதரன் தலைமையில் தமிழரசு கட்சி யாழில் வேட்புமனுத் தாக்கல்



எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் கையளித்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான  சி.சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன் , கே.சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் வேட்பாளர்கள் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post