தமிழகத்தின் அன்னை மசாலா யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக பிரபலமான அன்னை மசாலா நிறுவன இயக்குனர் சபையை சேர்ந்த டி.எல் .பாலாஜி அவரது சகோதரன் சங்கர் மற்றும் ரி. முருகேசன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்
யாழ்ப்பாணம் வருகை தந்தவர்களை பிரபல வர்த்தகர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையில் , தமிழ் தேசிய முற்போக்கு கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அன்னை மசாலாவில் உற்பத்திகளை , அதன் விநியோகஸ்தர் சுலக்சன் ஊடாக அறிமுகம் செய்தனர்.
அன்னை மசாலா நிறுவனத்தின் தயாரிப்புக்ளை யாழில் அறிமுகம் செய்துள்ளோம். தமிழகத்தில் பாரம்பரியங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி வருகிறோம். இயற்கை விவசாய உற்பத்திகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். யாழ்ப்பாணத்திலும் அதனை அறிமுகம் செய்து வைப்பத்தில் பெருமை அடைகிறோம். இங்குள்ள மக்களின் ஆதரவு எமக்கு தேவை.
கடந்த 1996ஆம் ஆண்டு ஆரம்பமான எமது நிறுவனம் தமிழக தாண்டி ஆந்திரா முதல் சிங்கப்பூர் வரை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எமது உற்பத்திகளை அறிமுகம் செய்துள்ளோம்
எமது நிறுவனத்தில் அரிசிமா தொடக்கம் மசாலா தூள், ஊறுகாய் வரையிலான தயாரிப்புக்கள் உள்ளன என நிறுவனத்தின் இயக்குனர் சபையை சேர்ந்த டி.எல் . பாலாஜி தெரிவித்தார்
Post a Comment