முதுகெலும்பு இருந்தால் வடகிழக்கில் ஊழல் விசாரணையை ஆரம்பியுங்கள் - கஜேந்திரகுமார் அரசாங்கத்திற்கு சவால்! - Yarl Voice முதுகெலும்பு இருந்தால் வடகிழக்கில் ஊழல் விசாரணையை ஆரம்பியுங்கள் - கஜேந்திரகுமார் அரசாங்கத்திற்கு சவால்! - Yarl Voice

முதுகெலும்பு இருந்தால் வடகிழக்கில் ஊழல் விசாரணையை ஆரம்பியுங்கள் - கஜேந்திரகுமார் அரசாங்கத்திற்கு சவால்!



உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வடகிழக்கில் ஊழல் சம்பந்தப்பட்ட விசாரணையை ஆரம்பியுங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கத்துக்கு சவால் விட்டுள்ளார்.

இன்று (14) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால்விட்டுள்ளர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் சம்பந்தப்பட்ட விடயத்தில் இந்த அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க பின்னடிக்கும் என நம்பவில்லை, 

ஏனென்றால் அந்த விடயத்தில் அரசாங்கம் விரும்பினாலோ அல்லவோ, தென்னிலங்கையில் இருக்கக்கூடிய மக்களுடைய அழுத்தம் என்பது மிகவும் அதிகமானது.

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து குறிப்பிட்ட காலப்பகுதியில், வெறுமனே மூன்று பேர் கொண்ட அமைச்சரவையே தற்போது இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் அந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என்பது கேள்விக்குறி, 

எங்களைப் பொருத்தவரையில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு தேவை இருக்கின்றது தாங்கள் ஏனைய அரசாங்கங்களை விட வித்தியாசமானவர்கள் என்பதை காட்டுவதற்காக இந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் அவர்கள் மனம் விரும்பி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால் இந்த நடவடிக்கையின் ஊடாக தங்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. தங்களுக்கு போட்டியாக இருக்கக்கூடிய மற்ற தரப்புகள் அனைவருக்கும் அது ஒரு பிரச்சனையாக இருக்குமே தவிர தங்களுக்கு ஒரு போட்டியாக இருக்கப் போவதில்லை, 

ஊழல் என்கின்ற விடயத்தில் 
வடகிழக்கை எடுத்துக் கொண்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தவிர மற்றய அனைவரும் சிக்கிக்கொள்வதகு சந்தர்ப்பம் இருக்கிறது.

இதனால் ஊழல் தொடர்பாக அவர்கள் கொண்டு போகின்ற அந்த முயற்சியை நாங்கள் கேள்விக்கு உட்படுத்த விரும்பவில்லை, அதையாவது செய்யட்டும்.

வடகிழக்கில் அவர்கள் இந்த விசாரணையை செய்வதின் ஊடாக நாங்கள் வெறுக்கத் தொடங்கி இருக்கின்ற தரப்புகளுக்கும் சிக்கிக்கொள்ள கூடும் இதனால் இதனை நாங்கள் விரும்புகின்றோம்.

நாங்கள் சவால் விடுகின்றோம் வடகிழக்கில் எங்களைத் தவிர மற்ற அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். ஆகவே வடக்கு கிழக்கில் ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்களை நீங்கள் விசாரிப்பீர்களாக இருந்தால் அனைவரையும் அம்பலப்படுத்த கூடியதாக இருக்கும். 

தெற்கில் உங்களுக்கு வாக்குகள் வரலாம் வடக்கு கிழக்கில் எங்களைத் தவிர மற்ற எடுபிடிகள் வென்றால் மாத்திரமே உங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகின்றது, 

ஆகவே உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வடக்கு கிழக்கில் ஊழல் சம்பந்தப்பட்ட விசாரணையை ஆரம்பியுங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post