இஸ்ரேலிய பிரதமரின் வீட்டை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்! - Yarl Voice இஸ்ரேலிய பிரதமரின் வீட்டை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்! - Yarl Voice

இஸ்ரேலிய பிரதமரின் வீட்டை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்!



இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் யாரும் காயமடையவில்லை அத்துடன் தாக்குதல் நடந்த போது நெதன்யாகுவும், அவரது மனைவியும் வீட்டில் இல்லை என பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த இரு தினங்களுக்கு முன், காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இவர்  கடந்த ஆண்டு அக்., 7இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர். ஹமாஸ் அமைப்பின் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறி இருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post