ஏனென்றால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் எங்களால் மூன்றே மூன்று சபைகளைத் தவிர ஏனைய எந்த சபைகளிலேயும் எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கவேயில்லை.
அது அந்த தேர்தல் முறையிலே இருந்த ஒரு விடயம். ஆக எங்களுக்குள்ளேயே இருக்கிற கட்சிகள் ஆசனங்களை வைத்திருந்தால் நாங்கள் சேர்ந்தே அறுதிப் பெரும்பான்மையை பெற முடியும் என்பது தான் எங்களது அடிப்படையாக இருந்தது. அது தான் அந்த எண்ணக்கருவும்.
ஆனால் அது கூட ஒரு யோசனையாகத் தான் நாங்கள் முன்வைத்தோம். அதிலும் நாங்கள் எடுத்த தீர்மானம் மற்றைய இரண்டு கட்சிகளுக்கும் நாங்கள் ஒரு சிபாரிசை செய்வோம். இப்படி செய்தால் நாங்கள் உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பது இலகுவாக இருக்கும் என்பதால் தான்.
எனினும் இதை கூட ஒரு யோசனையாகச் சொல்லி அவர்கள் இணங்காவிட்டால் அதை நடைமுறைப்படுத்துவது இல்லை என்றும் தீர்மானித்தோம். அவர்களோடு பேசிய போது அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
அதனால் கைவிடுவோம் என்று தீர்மானித்த போது இல்லை இல்லை நீங்கள் தானே தனிவழி என தீர்மானித்து விட்டீர்களே என்று கூறினர். ஆனால் நாங்கள் அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்த குழப்பத்திற்கு கட்சி முடிவுகளை அரைகுறையாக வெளியிடும் ஊடகங்களுக்கும் பெரிய பொறுப்பு உள்ளது.
இன்றைக்கு பல ஊடகங்களுக்கு இந்த சிறிய நுன்னிய வித்தியாசங்கள் புரிவதில்லை. அவர்கள் தாமாகவே கட்சி முடிவு என்பது போல தமிழரசு தனிவழி செல்ல தீர்மானம் என எழுதிவிட்டார்கள்.
ஆக ஊடகங்கள் சொல்வதை நம்பி நாங்கள் சொல்வதை நம்பாமல் நீங்கள் தானே தனிவழி என ஏற்கனவே தீர்மானித்து விட்டீர்கள் என்பதால் நாங்கள் தனித்து தான் போவோம் என்று கூறினார்கள்.
ஆக தனித்து போகும் தீர்மானத்தை அவர்கள் தான் எடுத்தார்கள். நாங்கள் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் அந்த தேர்தல் நடைபெறவில்லலை. அவ்வாறு தேர்தல் நடைபெறாத எஞ்சிய அந்த காலத்தில் பாராளுமன்றத்திலும் நாங்கள் ஒரு அணியாகத் தான் இருந்தோம். நாங்கள் பிரியவில்லை. ஒரு அணியாக செயற்பட்டோம்.
ஆகவே பங்காளிகளாக இருந்தவர்களை நாங்கள் அடித்து துரத்தி விட்டோம் என்று சொல்வதிலே எந்த உண்மையும் கிடையாது. எனினும் அவர்கள் தாங்களாகப் போனாலும் அது எங்களது கட்சியை தூய்மைப்படுத்துவதிலே பெரிய பங்கு அளித்திருந்தது. நாங்கள் துரத்தவில்லை. அவர்களாகப் போவதும் எங்களது கட்சியை தூய்மைப்படுத்துவதில் பெரிய பங்காற்றியிருக்கிறது.
ஆனாலும் ஒற்றுமை என்கிற ஏக்கம் எங்கள் மக்கள் மனங்களிலே இருக்கிறது. அது தவறான ஒரு ஏக்கம் அல்ல. நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் யாரோடு ஒன்றாக இருப்பது என்பதில் பெரிய கேள்வி இருக்கிறது.
அது டக்ளசோடு ஒன்றாக இருக்கலாமா? பிள்ளையானோடு ஒன்றாக இருக்கலாமா? கருணாவோடு ஒன்றாக இருக்கலாமா? கட்சியை விட்டு கட்சி தாவுகிற வியாழேந்திரனோடு ஒன்றாக இருக்கலாமா? அப்ப யாரோடு ஒன்றாக இருப்பது என்பது தான் கேள்வியாக உள்ளது.
எங்களுடைய ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த பிறகு வவுனியாவில் கேக் வெட்டி அரசின் இந்த வெற்றிக்கு எங்களுடைய பங்கும் இருக்கிறது என்று மார்தட்டிய சித்தார்த்தனோடு ஒன்றாக இருக்கலாமா? ஆனாலும்
அவரோடு ஒன்றாக இருந்திட்டம். அரச படையோடு வவுனியாவில் சேர்ந்திருந்தவர் தான் இந்தச் சித்தார்த்தன்.
மக்களுடைய எதிர்பார்ப்பு காரணமாக நாங்கள் கண்டதையும் சேர்த்து வைத்திருந்த ஒரு காலம் இருந்தது தான். இவ்வாறான நிலையில் நெற்றியில் பட்டை அணிந்து சிவப்பு பொட்டு வைத்து ஒரு ஆண்மீக வாதி போல தென்பட்ட ஒருவரை நாங்கள் வலிந்து கொண்டு வந்து ( இதற்காக பல தடவைகள் மக்களிடம் மன்னிப்பு கூட்டிருகிறேன்) முதல்வராக நிறுத்தினோம்.
இன்றைக்கு பெண்களுக்கு சாராய லைசன்ஸ்க்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு பெட்டி படுக்கையோடு யாழ்ப்பாணத்தை விட்டே இவர் போயிற்றார். ஆனால் போனவர் தன்னுடைய கட்சியையும் கூட்டி கொண்டு போயிருக்க வேண்டும்.
ஆனால அப்படி செய்யாமல் சில குட்டிமான்களை விட்டுவிட்டு போயிருக்கிறார்.சில மான் குட்டிகளை நீங்கள் கேளுங்கோ நான் ஒளிந்து இருக்கிறேன் என்று கூறி இப்போது ஒளிந்திருக்கிறார்.
அவர் பிரேமானந்தா படத்தை வைத்து கும்பிடும் போதே இவரைப் பற்றி நாங்கள் தெரிந்திருக்கோனும். ஆக இப்படியான ஒருவர் அதுவும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிற போது கூட பச்சைப் பொய்யை தான் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
அதாவது தாய் தகப்பன் இல்லாத ஒரு பெண்ணுக்கு வாழ்வாதாரம் கொடுத்தேன் என்று சொல்லியுள்ளார். அந்தப் பெண்ணிண் குடும்ப வர்த்தகமே இந்த பார் நடாத்துறது தான். இவருக்கு ஒரு லைசன்ஸ் கிடைத்தவுடன் இதனை அந்த பார் குடும்பதிற்கே அவர்களுக்கு விற்றுவிட்டு பெட்டி படுக்கையுடன் இவர் போய்விட்டார்.
ஆகவே வாக்காளர்களாகிய நீங்கள் அவர் விட்டு போன அந்த குட்டிமான்களை நீங்கள் அடித்து துரத்த வேண்டும். அது எப்படியான கட்சி என்று அனைவரும் முதலில் பார்க்க வேண்டும்.
தமிழரசுக் கட்சி உறுப்பினராக மாகாண சபை நடந்து முடிகிற காலப் பகுதிவரை இருந்துவிட்டு ஒரு நாள் ஓய்வு கூட இல்லாமல் அடுத்த நாள் ஒரு புதுக் கட்சி தொடங்கியவர். அது தான் இந்தக் கட்சி. இதுதான் பார் லைசன்ஸ் கொடுத்த கட்சியும்.
இப்போது மானும் பாரும் சேர்ந்ததாக பல மீம்ஸ்களை பார்க்கிறோம். இதேபோல வீட்டு சின்னத்திலும் பீர் வந்திருக்கும். நல்ல காலம் சார்ள்ஸ் நிர்மலநாதன் தேர்தல் கேட்கவில்லை என்று தானாகவே சொல்லிவிட்டார். அவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார்.
இங்கு உடுப்பிட்டியிலும் ஒரு பாருக்கு எதிராக வழக்கு நடக்கிறது. அந்த பாரை நிறுத்த நாங்கள் அரும்பாடு படுகிறோம். இதே போல முழங்காவிலிலும் கோவிலுக்கு அருகில் என்று சொல்லி மூடிவிட்டம். இதேவேளை உச்ச நீதிமன்றதிலும் அதிக பார் அனுமதிகள் என்று ஒருவழக்கு போடப்பட்டு நடந்து வருகிறது. இப்படியாக பார்க்க எதிராக நாங்கள் போராட்டங்கள் நடாத்தி வருகிறி போது எங்களுக்கு உள்ளேயே அங்க இங்க சுத்திக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இந்த லைசன்சை எடுத்துக் கொடுத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களை நீங்கள் இணங்கண்டு அடித்து துரத்த வேண்டும். தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய சமூக விரோத செயலை செய்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
அதிலும் இதை காசுக்கு விற்பது அதாவது அரசியலை வியாபாரமாக்கி செய்பவர்களை இனம்கண்டு விரட்டியடிக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் என்பது சிலருக்கு தெரிந்து விட்டதால் தாங்களாகவே விலகிவிட்டார்கள்.
இங்கே பணமுதலைகள் வந்து தாங்கள் அரசியலை ஆட்டிபடைப்பது பற்றி சொல்லபடுகிறது. இந்த பண முதலைகள் பற்றி ஒரு நேர்காணலில் நாங்கள் சொன்னபோது நான் ஒருவரைப் பற்றி சொன்னேன். ஆனால் இன்னொருவர் நான் தன்னைப் பற்றி சொன்னேன் என்று நினைத்து தானே தொப்பியை போட்டுக் கொண்டு அதற்கு பிறகு என்னைப் பற்றி பெரிய பரப்புரை செய்கிறார்.
ஆக இவர் ஏன் இவ்வளவு துள்ளுகிறார் என்று பார்த்தால் நான் சொன்னதை அவர் பிழையாக விளங்கிவிட்டார். அதாவது தன்னைத் தான் நான் சொன்னதாக அவர் நினைத்துவிட்டார். இந்த இரண்டும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள் தான். அதில் ஒன்று தன்னைப்பற்றி தான் நான் சொல்கிறேன் என்று நினைத்துவிட்டது. ஆனால்
நான் உண்மையில் மற்றதைப் பற்றி தான் சொன்னேன்.
இன்றைக்கு அவர்கள் செலுத்த நினைக்கிற ஆதிக்கம் என்பது தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் பெரியதொரு தடை. பெரியதொரு ஆபத்து. ஏனென்றால் பணத்தினால் எதையும் செய்ய முடியும் என்று நம்புகிறவர்கள் அவர்கள். எப்படியான வழிகளில் அவர்கள் பணம் சம்பாதித்தார்கள் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும்.
அவர்கள் எங்கள் தூய அரசியல் பயணத்தில் ஒரு பாரிய களங்கமாக இன்றைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் பலர் இதற்கு விலைபோய் விட்டார்கள். பார் லைசன்சையே விற்பவர்கள் இதற்கு விலை போவது என்ன பெரிய விசயமா?
இப்ப பலர் விலை போய் விட்டார்கள். அது யார் யார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அந்த அலுவலகத்திற்கு போயிற்று வாறவர்கள் பற்றி எங்களுக்கு தெரியும். யார் உள்ளே போகிறார் யார் வெளியே வருகிறார் என்பதும் அவ்வாறு வரும் போது சப்பட்டையாக இருந்த பொக்கற் கொஞ்சம் பெருத்திருக்கிறது.
இது எல்லாம் ஆட்கள் காணுவது தானே.
அதுவும் ஒரு கட்சி இரண்டு கட்சி என்றில்லாமல் மூன்று அரசியல் கட்சி இருக்கிறது. அதைவிட்டு மற்ற அரசியல் கட்சிக்குள்ளேயும் ஒருவர் இருவர் எனவிலைக்கு வாங்கிவிட்டார்கள்.
இதனுடைய நோக்கம் என்ன? பண ஆதிக்கத்தால வரப்போகிற பாராளுமன்றத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்கு முதலீடு செய்கிறார்கள். இல்லலாவிடின் ஏன் இவ்வளவு காசைக் கொட்டுவான்.
அதுவும் பாராளுமன்றத்தில் இந்தப் பக்கம் இந்தப் பக்கம் என எந்தப் பக்கத்தில் இருந்தாலும் எல்லாப் பக்கத்திலும் ஒன்று இரண்டு பேரை அப்படியே பிடிப்பதற்காக கொடுக்கப்கடுகிற முதலீடு தான் இது என்பதை நான் பகிரங்கமாகவே இன்றைக்கு சொல்லுகிறேன்.
ஆகவே தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது மட்டுமல்ல நீங்கள் கொஞ்சம் துப்பறிந்து இது யார் யார் என்று கண்டுபிடித்து அவர்களை தமிழ் அரசியலில் இருந்த நீக்க வேண்டியது உங்களது பொறுப்பு. இந்த பொறுப்பை நீங்கள் நிறைவேற்றுங்கள். அப்படியானவர்களை முற்றாக நீக்க வேண்டும்.
சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் இது நடந்தது. இப்படி சிலர் விலைக்கு வாங்கப்பட்டார்கள். அதற்கமைய சில பரப்புரைகள் நடந்தது. ஆனால் அதைவிட பன்மடங்கு மோசமாக இப்ப அது வேரூன்றுகிறது.
ஆகையினால் உங்கள் செவிகளை கூர்மையாக்கி வைத்துக் கொள்ளுங்கள். வருகிற சங்கதிகளை கவனமாக கேளுங்கோ. அவதானமாக இருங்கள் நடக்கிற விசயங்களை கவனமாக அவதானித்தால் யார் யார் விலைபோய் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிய வரும்.
ஆனால் எங்கட கட்சியில் அப்படி எவரும் இல்லை. இதை நான் துணிந்து சொல்லுகிறேன். எங்கட கட்சியில் வேட்பாளர்களாக அப்படி எவரும் இல்லை. வேட்புமனுவில் தங்களுக்கும் வேட்பாளர் நியமனம் வேண்டுமென்று கேட்டு அது கிடைக்காத காரணத்தினாலே வேறு கட்சிகளில் போய் இருக்கிற பலர் இன்றைக்கு இதற்கு இரையாகி இருக்கிறார்கள்.
44 அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே போட்டி இடுகிறார்கள். இதற்கு காரணம் என்ன என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்? இவர்கள் எல்லாம ஏதோ பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்து விடும் என்று நினைத்து போட்டியிடுகிறார்கள்.
உண்மையாகவே அவர்களுக்கு இப்படியான ஒரு எண்ணம் இருக்கிறதா என்றால் இல்லை. அப்ப ஏன் போட்டியிடுகிறார்கள. என்றால் உண்மையில் இவர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துக்காக போட்டியிடவில்லை. தங்கள் பொக்கற்றை நிரப்புவதற்காகத் தான் போட்டியிடுகிறார்கள். ஆக வேட்பாளர் பட்டியிலில் கையெழுத்து போட்டால் இவர்களுக்கு பணம் கிடைக்கும் என்பதால் தான்.
இதில் பெரும்பாலானவர்கள் யாரென்றே தெரியாது. இப்ப தடுக்கி வழுந்தால் கூட ஒரு வேட்பாளரில் தான் தடுக்கி விழ வேண்டும் என்பதாக யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் வேட்பாளர்களாக உள்ளனர்.
இங்கு பணம் சம்பாதிப்பதற்கு நல்லதொரு வழி இப்ப பிறந்திருக்கிறது. வேட்பாளராக போயிற்றா எல்லாம் சரி என்றதாக நினைக்கிறார்கள்.
உண்மையில் இங்கே இருக்கிறது ஆறு ஆசனங்கள் தான். இந்த ஆறில் ஒன்று போனஸ் அப்ப பிரதான கட்சிக்கு தான் இந்த போனஸ் ஆசனம் கிடைக்கும். அப்படியாக 2 போயிற்றால் மீதி நான்கு ஆசனங்கள் தான்.
அதிலும் அனேகமாக பிரதான கட்சிக்கு இன்னொரு ஆசனம் கிடைக்கும்.இன்னுமொரு கட்சிக்கு ஓரு ஆசனம் கிடைத்தாலும் மிகுதி 40 குழுக்களும் ஏன் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தல் முறையில் எஞ்சிய வாக்குகளில் அதிகூடிய வாக்கை பெற்றவருக்கு தான் கடைசியாக ஒரு ஆசனம் கொடுக்கப்படும்.
இந்த தேர்தலில் மக்களுக்கு முன்பாக ஒரு பாரிய மாற்றத்தை நாங்கள் காட்டுகிறோம். ஆற்றல் உள்ளவர்களை மக்கள் எதிர்பார்க்கிற அந்த இளையவர்களை படித்தவர்களை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம்.
எங்கட கட்சிக்குள் இது இலகுவாக செய்யப்பட்ட மாற்றம் அல்ல. உண்மையில் இலகுவான மாற்றம் அல்ல என்பதும் கட்சிக்குள் இருந்து பிரிந்து பிரிந்து போய் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்துறதும் அது இது என்று சொல்றது. அதில் இருந்தே தெரிகிறது. ஆனாலும் மக்களுக்காக அந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆக மக்களுக்காக இந்த மாற்றத்தைச் செய்து நாங்கள் முன்னிறுத்தி இருக்கிற போது அந்த ஆறு ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குத் தான் கொடுக்க வேண்டும். மக்களிடத்தே சென்று வாக்குகளை வீணாக்காமல் தமிழரசிற்கு போட சொல்ல வேண்டும். அதைவிடுத்து மற்றைய தரப்புகளுக்கு அளிக்கும் வாக்கு வீணாக்கப்படும் வாக்குகள்.
இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கிற மாற்றத்திற்கு ஈடு கொடுப்பதற்கு அவர்களுடைய சிந்தனையிலே எல்லலோரும் சமமாக இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு இல்லை நாங்கள் ஒரு தேசம், நாங்கள் ஒரு மக்கள், எங்களுக்கென்று ஒரு பாரம்பரியம், பண்பாடு, அரசியல் உரித்து, சுயநிர்ணய உரிமை உண்டு என்று சொல்வதற்கு ஒரு அணியாக வடக்கு கிழக்கில் இருந்து செல்ல வேண்டும்.
வடக்கையும் கிழக்கையும் பிரித்தவனுக்கு வடக்கும் கிழக்கும் இணைந்து நாங்கள் போய் காண்பிக்க வேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்த இணையக நாங்கள் போவதாக இருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சியால் மட்டும் தான் இது முடியும் என்றார்.
Post a Comment