தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதற்கு, அவர்களுக்காக தெற்கில் பேரம் பேசுகின்ற தமிழ் தேசிய கொள்கை கொண்ட, புதிய ஆளுமைமிக்கவர்கவர்களின் வருகை தேவையாக உள்ளது.
இதனால் மும்முறை தேர்தலில் தமிழ் மக்கள் புதியவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 2 இல் ஊஞ்சல் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி ஈ.எஸ்.பி.என் கமலறூபன் தெரிவித்தார்.
யாழ்.ஊகட அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மும்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிகளாவாக கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
பெரும்பாலும் தேர்தல்களில் களமிறக்கப்படும் சுயேட்சைக்குழுக்கள் வாக்குகளை சிதறடிக்கவே களமிறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நான் இம்முறை மட்டும் தேர்தலில் போட்டியிட வில்லை. கடந்தமுறை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நான் வேட்புமனு தாக்கல் செய்தன். ஆனால் தேர்தல் நடைபெறவில்லை.
என்னுடைய தனித்துவமான செயற்பாடுகளை, கருத்துக்களை அல்லது கொள்கைகளை தமிழ் மக்களிடையே காண்பிப்பதற்காகவே இந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடுகின்றேன். என்னையும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற சில கட்சிகள் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு கோரியிருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நான் நிராகரித்துவிட்டேன்.
என்னுடைய தனித்துவமான குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களையும், எனது தேசியம் சார்ந்த நிலைப்பாடுகளை தமிழ் மக்களிடையே தெளிவுபடுத்தும் வகையில் வெளியிடவுள்ள என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவோன். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக என்னுடைய நிலைப்பாட்டினை மக்கள் தெரிவாக புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டுமானால் தமிழ் மக்கள் சார்ந்து பேரம் பேசக் கூடியவர்கள் தேசியம் உள்ளடங்கலான புதிய கொள்கைகளை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறாக இருந்தால் தமிழ் மக்கள் இம்முறை புதிய முகங்களுக்கும், இளையவர்களுக்கும் வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றார்.
Post a Comment