தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியானது மான் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகிறது.
ஆனாலும் கட்சியின் செயலாளர் நாயகமான விக்கினேஸ்வரன் இத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருக்கிற நிலையில் சட்டத்தரணி மணிவண்ணணை முதன்மை வேட்பாளராக கொண்டு கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
இதற்கமைய மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் இக் கட்சியின் வேட்பாளர்கள் யாழில் இன்று காலையில் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அக் கட்சியின் யாழிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன் போது கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் மாநகர முதல்வருமான சட்டத்தரணி மணிவண்ணண் பெற்றுக் கொண்டார்.
இவ் வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment