யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..
தேர்தல் கால வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக இப்பொழுது சறுக்கத் தொடங்கி இருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகளிலே தமிழ் மக்கள் சம்பந்தமான வாக்கிறுகளில் பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றும் அதிலும் இந்த விடயம் தேர்தல் கால வாக்குறுதி மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தங்களுடைய நிலைப்பாடாக வைத்திருந்த்து.
இவ்வாறு தொடர்ச்சியான தெளிவான நிலைப்பாடாக இருந்த ஒரு விடயத்தை இப்பொழுது ஆட்சிக்கு வந்த உடனே அந்தச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதும் என்று சொல்லுகின்றனர்.
இவ்வாறான நிலைப்பாடுகள் என்பது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசின் ஒரு குத்துக் கரணம் ஆகும். ஏனெனில் தாங்களாக நீண்டகாலமாக எடுத்திருந்த ஒரு நிலைப்பாட்டை பதவிக்கு வந்த பின்னர் மாற்றுவது உண்மையில் அதுவொரு குத்துகரணம் தான்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தினாலே மிகவும் மோசமாக தமிழ் மக்களே பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் ஜேவிபியினரும் ஒரளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் தான். இதேபோன்று ஈஸ்ர்ர் தாக்குதல் காலத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் தான்.
ஆனால் ஓரளவிற்காவது பாதிக்கப்பட்ட ஒரு குழுவினராக இருக்கிற ஜேவிபியினர் இப்போது திடிரென்று அதை நாங்கள் துஸ்பிரயோகம் செய்யாமல் விட்டால் போதும் என்று சொங்லுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து.
அவர்களது இந்த கருத்து நிலைப்பாடு எதனைச் சுட்டி காட்டுகிறது என்றால் அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் சொன்ன கருத்துக்கள் அல்லது வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக காற்றில் பறக்க விடப்பட போகிறது என்பதற்கு முதல் அறிகுறியாக இது அமைகிறது என மேலும் தெரிவித்தார்.
Post a Comment