தமிழர்களின் இருப்பை பாதுகாக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தேசியக்கூட்டணியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்காணம் காங்கேசன் துறையில் இன்று இடம்பெற்ற பிரச்சார நடவடிக்கையின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..
தற்காலத்துக்கு தேவையான தமிழ்த் தேசியவாதியாக நான் சிந்திக்கிறேன். தமிழர்களின் இருப்பை பாதுகாக்காமல் தமிழ்த்தேசியம் சாத்தியமடையாது.
இங்கு 9லிருந்து 6 ஆக எங்களது பிரதிநிதித்துவத்தை வீழ்ச்சியடையச் செய்ததுதான் தமிழ்த் தேசியவாதிகள் என சொல்லிக் கொண்டிருப்பவர்கள் செய்த சாதனை.
ஆகவே மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தை நோக்கியதாகவே எனது அரசியல் பயணம் உள்ளது.
இதுவே தமிழர்களின் இருப்பை உறுதிசெய்யும். ஆகவே மக்கள் சிந்தித்து செயற்பட்டு எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment