இவ்வாறு ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
தேர்தலில் கனிசமான ஆதரவு சங்கிற்கு இருக்கின்றமை மிக தெளிவாக தெரிகின்றது. கடந்த ஐனாதிபதி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் இந்த சங்கு சின்னத்திற்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருந்தன. இப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் சங்கு சங்கு என ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதைக் காட்டிலும் நாங்கள் தான் ஐந்து அமைப்புக்கள் ஓர் கூட்டாக போட்டியிடுகின்றோம். எமது மக்களைப் பொறுத்தமட்டில் பல தடைவைகள் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை சம்பந்தமாக தொடர்ந்து கூறிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
அந்த அடிப்டையில் நாங்கள் தான் ஒரு கூட்டமைப்பாக அதுவும் பதிவு செய்யப்பட்ட அமைப்பக போட்டியிடுகிறோம். அதனை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறோம்.
அதைவிட எங்கள் சம்பந்தமாக சங்கு திருடிகள் என்ற சொல்லை நான் பார்க்க கூடியதாக இருக்கின்றது. உண்மையில் இதில் திருடுவதற்கு எதுவுமே இல்லை. இந்த சங்கிலே சரிபாதி நாங்கள் தான். ஏனென்றால சிவில் அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் 50 இற்கு 50 என்ற அடிபடையில் மிக தீவிரமாக நாங்கள் செயற்பட்டோம். அதனால் அதிகமான வாக்கை பெற்றோம். அதில் எங்களுக்கும மிகப் பெரிய பங்கு இருக்கிறது.
இவ்வாறான நிலையில் சங்கு திருடிகள் என்று சொல்லுகிற எவருமே சங்கிற்காக பாடுபட்டவர்கள் அல்லர். முக்கியமாக தமிழரசுக் கட்சியில் இருந்து இக் கருத்தைச் சொல்பவர்களை பார்த்தீர்களானால் அவர்கள் சங்கை தோற்கடிப்பதாக கூறி செயற்பட்டவர்கள்.
தமிழரசுகட்சியின் ஒரு முக்கிய பிரமுகரை நான் சந்தித்த போது மாவை அண்ணர் மிகவும் மனம் உடைந்து காணப்படுகிறார் என்றும் அவரை ஒரு தடவை சென்று பாருங்கள் எனவும் என்னிடம் கேட்டிருந்தார்.
மாவை அண்ணருக்கு என்ன என கேட்ட போது தான் அவர் சொன்னார் கடந்த 70 வருடங்களாக கட்டிக் காத்த வீட்டை அண்மையில் வந்தவர்கள் திருடிச் சென்று விட்டார்கள் என்றும் அவ்வாறு திருடி சென்றது மாத்திரமல்லாமல் தன்னையுமே கூட வீட்டிற்கு வெளியில் போட்டு விட்டார்கள் என்பதுடன் அவ்வாறு தன்னை மாத்திரமல்லாமல் மூத்த பல உறுப்பினர்களையும் கூட வெளியில் விட்டுள்ளார்கள் என வேதனைப்படுகிறார் என்றார்.
அதில் மிகப் பெரிய உண்மை இருக்கிறது. அப்படி திருடப்பட்ட இந்த வீட்டிற்குள் கடைசியாக நடந்த மகாநாட்டிலே கூட இக் கட்சியின் பெரும்பான்மை அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறிதரன் அவர்கள் கூட கொஞ்ச காலம் வெளியிலே தான் நின்றார்.
உண்மையில் அவரை வெளியில் நிறுத்துவதற்கான முயற்சிகள் தான் எடுக்கப்பட்டது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்போது அந்த வீட்டுக்குள்ளே சேர்த்திருக்கிறார்கள்.
ஆனாலும் இப்ப கூட அந்த வீட்டின் அவர் ஒரு மூலையிலே தான் நிற்கின்றார்.
அவ்வாறு திருடப்பட்ட வீட்டின் மூலையிலிருந்து கொண்டு எங்களை பார்த்து சங்கு திருடிகள் என்று சொல்கிறார். திருடப்பட்ட ஒரு வீட்டிலேயே அவர் நின்று கொண்டு சங்கு திருடிகள் என்று செல்வது என்னவென்றே இதுவரை விளங்கவில்லை.
இவர் மட்டுமல்லாமல் இப்போது வேறு சிலரும் இப்படியாக சங்கு திருடிகள் எனச் சொல்பவர்கள் சங்குக்காக ஒரு வாக்கைகூட எடுப்பதற்கு முயற்சித்தவர்கள் அல்லர். அவர்கள் அதற்கு எதிராகச் செயற்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
ஆகவே இதைப்பற்றியெல்லாம் மக்களும் கவலைப்படவில்லலை. நாங்களும் கவலைப்படவில்லை. நாங்கள் செல்லுகிற இடத்தில் எல்லாம் எவருமே இதைப்பற்றி எங்களிடம கேட்டதும் இல்லை. இது ஒரு பெரிய விடமும் அல்ல. அதனால் இதைப்பற்றி அலட்டி கொள்ள தேவையில்லை.
இதை ஏன் இப்போது இப்படி சொல்கிறார்கள் என்பதும் எங்களக்கு தெரியும். ஏனெனில் மக்கள் மத்தியில் போகும் போது எங்களுக்கு இருக்ககூடிய வரவேற்பு சங்கு சின்னத்திற்கான ஆதரவு தான் காரணம்.
இது மாத்திரமல்ல சிவில் அமைப்பு என்று சிலர் சங்கை எதிர்த்திருந்தாலும் அந்த சிவில் அமைப்பை சேர்ந்த இருவர் எங்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியும் இடுகின்றார்கள். ஆகவே சிவில் அமைப்புக்கள் முழுமையாக எங்களை விட்டு போனதாக இல்லை. ஆனாலும் சிலர் போயிருந்தாலும் பலர் இப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார்கள்.
ஆகவே நாம் மிக ஆரோக்கியமான வாக்குகளை பெற்று பெரும்பான்மையான ஆசனங்களை பெறுவதற்கு வாய்ப்பு இருப்பாகத் தான் நான் கருதுகிறேன்.
இந்தக் கூட்டணி குறித்து சமந்திரன் ஏதோ சொல்லியிரெக்கிறார். உண்பையில் இந்த கூட்டணி பதிவு செய்யப்பட்ட காலம் அவருக்கு தெரியவில்லை. இது ஏறக்குறைய 12, 13 வருடங்களுக்கு முன்பு அதாவது நான் கூட கூட்டமைப்பில் சேருவதற்கு முன்பு பதியப்பட்டது.
ஆனால் நாங்கள் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்று தான் வைத்திருந்தோம். ஆகவே இது இப்போதோ எப்போதோ திருடப்படவில்லலை. அது நாங்களாக உருவாக்கி பதிவு செய்து வைத்திருக்கிறோம்.
இது நாங்கள் கூட்டமைப்பில் சேருவதற்கு முன்பு பதியப்பட்டது. நாங்களும் கூட்டமைப்பில் சேர்ந்த பின்னர் அது அப்படியே இருந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்ததால் தான் நாங்கள் தனிவழி வந்தோம். அந்த வழியில் எமக்கு பலமான ஆதரவு இருப்பதை பார்க்கிறோம்.
இதேவேளை உண்மை நீதி நேர்மை நியாயம் என்பவற்றுடன் தமிழ்த் தேசிய கொள்கையுடன் தமிழரசுக் கட்சி செயலாற்றி வந்த்து. ஆனால் இன்றைக்கு அதே நிலைப்பாட்டில் கட்சி இ்யல்லாததாலேயே இத்தனை விமர்சங்களையும் எதிர்ப்புக்களையும் சந்தித்து வருகிறது.
இதற்கமைய நடைபெறவுள்ள இத் தேர்தலில் தமிழ் மக்களின் சிந்தனைக்கு அமைய ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் தேசிய கொள்கையுடன் ஒரே ஒரு கூட்டசியாக பயணிக்கிறதால் மக்கள் ஆதரவுடன் 6 முதல் 8 ஆசனங்களை வடகிழக்கில் எடுப்போம் என நம்புகிறேன் என்றார்.
Post a Comment