தமிழரசின் தலைவர் பதவியிலிருந்து மாவை விலகல்? - Yarl Voice தமிழரசின் தலைவர் பதவியிலிருந்து மாவை விலகல்? - Yarl Voice

தமிழரசின் தலைவர் பதவியிலிருந்து மாவை விலகல்?



இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்கு மத்தியில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் உட்கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளதுடன் கட்சியில் இருந்தும் பலர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

 இந்த நிலையிலேயே கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கட்சியின் பதில் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக பெரிய வருகின்றது.

ஆனாலும் கட்சியின் தலைவரின் விலகும் அறிவித்தல் தொடர்பில் தமக்கு இதுவரையும் எந்த ஒரு கடிதமும் கிடைக்கவில்லை என கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post